Breaking News

இலங்கை தமிழர் மலேசியாவில் தாக்கப்பட்டு கொலை!(படங்கள்)


இலங்கையிலிருந்து பாதுகாப்பு தேடி மலேசிய UNHCR இல் தஞ்சம் கோரி கடந்த ஏழு ஆண்டுகளாக மலேசியா ஜோகூர் மாசை  எனும் இடத்தில்  வாழ்ந்து வந்த ஒரு குழந்தையின் தந்தையான கணபதிப்பிள்ளை விவேகானந்தன் (20.12.1983) என்ற இலங்கையில் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு கிண்ணையடி வாழைச்சேனையை சேர்ந்த இளைஞன் 03.09.2020 அன்று அதிகாலை 2 மணியளவில் சிலரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையின் பின்னர் வீடு சென்ற நிலையில் 06.09.2020 அன்று நண்பகல் உயிரிழந்துள்ளார். 

இச் சம்பவம் தொடர்பில் மலேசிய காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி இது தொடர்பில் இருவரை கைதுசெய்துள்ளதாக  தெரிவித்துள்ளது.

மலேசியாவில் உணவகம் ஒன்றில் பணிபுரிந்துவந்த நிலையிலேயே உணவக வேலை முடிந்து இரவு 2.00மணயளவில் வேறு இரு இளைஞர்களுடன் ஏற்பட்ட தகராறிலேயே தலையில் காயமடைந்திருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அறுவைச்சிகிச்சை செய்ய வேண்டுமென மருத்துவமனை வட்டாரங்களிலிருந்து தெரிவிக்கப்பட்டதாகவும் அதற்கு நிதி தேவையென சொல்லப்பட்டதாகவும் இருந்தும் அவர் வீடுசென்றிருந்த நிலையிலே் இரண்டாவதுநாள் வீட்டில் சாவடைந்துள்ளார்.

பல துன்பியல் சம்பவங்களைக் கடந்து பலர் எதிர் காலம் குறித்த ஏக்கத்துடன் மலேசிய UNHCR இல் பதிவு செய்து ஒரு நிரந்தரத் தீர்வின்றி பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து நீண்ட நாட்களாக வாழ்ந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 



கடந்த மாதமும் இவ்வாறு இலங்கை தமிழர் ஒருவர் கொலைசெய்யப்பட்டதாகவும் அதற்கான காரணம் கூறப்படவில்லை என்றும் இந்த அகதிகளுக்கான தீர்வோ விசாரணையோ செய்யப்படாமல் அவை கிடப்பிலேயே இருந்துவருவதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத அகதிகளுக்கான தமிழ் பிரதிநிதியொருவர் தமிழ்கிங்டொத்திடம் தெரிவித்துள்ளார்.