Breaking News

ஜனாதிபதியிடமிருந்து மற்றுமோர் அதிரடி சலுகை! - குறையுமா தங்கத்தின் விலை?

இரத்தினக்கல் மற்றும் நகை ஆபரண கைத்தொழிலாளர்கள் ஈட்டும் இலாபத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த 14 சதவீத வருமான வரி மற்றும் தங்க இறக்குமதி வரியான 15 வீதத்தையும் நீக்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானம் மேற்கொண்டுள்ளார். 



இதனால் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். 

இது தொடர்பில் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை கீழே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.