Breaking News

போராட்டக்களத்தில் மலர்ந்த காதல் - காதலுக்கு முத்தமிட்டு ஓகே சொன்ன பெண்!


பெலாரஸில் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ பதவி விலக வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்துக்கு இடையே பெண்ணிடம் போராட்டக்காரர் ஒருவர் திருமணம் செய்துகொள்ள லவ் புரபோஸ் செய்த சுவாரஸ்ய நிகழ்வு அரங்கேறியது. 

கிழக்கு ஐரோப்பாவில் உள்ளது, பெலாரஸ். 1922 - ம் ஆண்டில் ரஷ்யப் புரட்சியின் போது விடுதலை பெற்று சுதந்திர நாடானது. இங்கு, கடந்த 9 - ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் 6 - வது முறையாக அலெக்சாண்டர் லுகாஷென்கோ அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் தேர்தலில் மிகப்பெரிய அளவில் மோசடி நடந்துள்ளது என்று ஆயிரக்கணக்கானோர் போராட்டம் செய்து வருகிறார்கள். 

இந்த நிலையில், தலைநகர் மின்ஸ்க்கில் நடைபெற்ற போராட்டக்களத்தில் பெண் ஒருவரிடம் போராட்டக்காரர் ஒருவர் திருமணம் செய்துகொள்ளும் நோக்கில் மண்டியிட்டு தனது காதலை வெளிப்படுத்தி புரபோசல் செய்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத அந்தப் பெண் இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடிப்போய் கண்கள் கலங்கியபடி, போராட்டக்காரரின் காதலை ஏற்றுக்கொண்டார். சுற்றிலும் திரண்டிருந்த போராட்டக்காரர்கள் கைதட்டி ஆரவாரமிட புதுக்காதலர்கள் இருவரும் கடியணைத்து முத்தமிட்டுக் கொண்டனர்..!