நிதியமைச்சிடம் இருந்து பொது மக்களுக்கான ஓர் விசேட செய்தி!
அரசாங்கத்திற்கு பொருட்கள், சிவில் ஒப்பந்த வேலைகள் மற்றும் சேவை வழங்க ஆர்வமுள்ள விநியோகஸ்தர்கள் அரச மின்னணு கொள்முதல் முறைமையின் கீழ் பதிவு செய்து கொள்ளுமாறு நிதியமைச்சு அழைப்பு விடுத்துள்ளது.
தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலான ஏலத்தினை முன்வைக்கும் செயற்பாடுகளுக்காக விநியோகஸ்தர்களை பதிவு செய்தல், கொள்முதல் நிறுவனங்களை பதிவு செய்தல் மற்றும் கொள்முதல் அறிவித்தலை வெளியிடுதலை நோக்கமாக கொண்டு அனைத்து வசதிகளுடன் இந்த கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஏலம் விடுப்பது, ஏலம் எடுப்பதுடன் அவற்றை ஆராயவும் இந்த கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.