Breaking News

புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர்களை அலரி மாளிகைக்கு அழைத்து பிரதமர் பாராட்டு!

கனடா தமிழ் முதலீட்டாளர்களை பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அலரி மாளிகைக்கு இன்று (11) அழைத்திருந்தார். 

வடக்கு - கிழக்கில் இருக்கக்கூடிய முதலீடுகளை ஊக்கப்படுத்தும் முகமாகவும், மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் முகமாகவும் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. 

இந்தச் சந்திப்பில் கனடாவில் இருக்கக்கூடிய முதலீட்டாளர்களான சுகந்தன் சண்முகநாதன் மற்றும் சதீஸ் ராஜலிங்கம் ஆகியோர் கலந்துக் கொண்டிருந்தனர். 

பனை அபிவிருத்தி நிறுவனத்துடன் இணைந்து சில வேலைத் திட்டங்களை செய்து வரக்கூடிய குறித்த 2 முதலீட்டாளர்களும் வடக்கு - கிழக்கு மக்களை தொழில் ரீதியாக உள்ளவாங்கியதற்காக பிரதமர் பாராட்டுக்களை தெரிவித்தார். 

இச் சந்திப்பில் மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்துக் கொண்டிருந்தார். 

இச்சந்திப்பின் போது பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, தற்போது நாட்டில் உள்ள சூழ்நிலையில் வடக்கு - கிழக்கு பகுதியில் தங்களின் முதலீடுகளை ஊக்கப்படுத்தி, அங்கு இருக்கக்கூடிய மக்களுக்குத் தொழில் வாய்ப்புகளை அதிகரித்துக் கொடுப்பதனூடாக அப் பகுதிகளில் தனியார் நிறுவனங்களை வெகுவிரைவில் அதிகரிக்க வேண்டும் எனவும், அம்முயற்சிக்குத் தான் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.