கழுத்தில் கத்தி வைத்தது ஆவா! - மணி தொடர்பில் திடுக்கிடும் ஆதாரங்கள்(காணொளி)
கழுத்தில் கத்தி வைத்து வெட்டுவோம் என ஆவா குழு மிரட்டியதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
மணிவண்ணன் மீதான கட்சி நடவெடிக்கை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் கழுத்தில் கத்தி வைத்து வெட்டுவோம் என ஆவா குழு மிரட்டியதாக இன்று பகிரங்கமாக சத்தி தொலைக்காட்சி மின்னல் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
கடந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுற்று மக்கள் சந்திப்புக்காக இணுவிலில் ஒழுங்குசெய்யப்பட்ட கூட்டமொன்றில் நுழைந்த ஆவா குழு மணிவண்ணனை அழைக்காது இங்கே கூட்டம் நடாத்த முடியாது என கழுத்தில் கத்திவைத்து மிரட்டியதாகவும் அதனை மீறி செய்தால் வெட்டுவோம் என மிரட்டல் விட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இவ்வளவுகாலமும் மணிதொடர்பில் பல குற்றச்சாட்டுக்கள் அரசல் புரசலாக பேசப்பட்டபோதும் யாரும் பொதுவெளியில் ஆவா தொடர்பில் வாய்திறக்காதபோது முதன்முதலில் இதனை இன்று வெளிப்படுத்தியுள்ளார்.
தேர்தல் முடிவடைந்து மக்களுக்கு நன்றி செலுத்த சென்ற வேளையிலேயே ஓரிடத்தில் கதிரைகள் அடித்து நொருக்கப்பட்டு கூட்டம் குழப்பபட்டதாகவும் மற்றய இடத்தில் கத்தி வைத்து மிரட்டியும் அந்த கூட்டங்கள் நடாத்த முடியாது போனதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக அவர் தெரிவித்தவை
மணிவண்ணன் தொடர்பில் தெரிவித்த முழுமையான நேர்காணல்
தொடர்புடைய முன்னைய செய்திகள்