இங்கிலாந்தில் கொரோனா விதிமுறைகளை மீறுபவர்களுக்கு 13,000 டாலர் அபராதம்! - போரிஸ் ஜான்சன்
கொரோனா வைரஸின் தாக்கத்தில், நேற்றைய நிலவரப்படி நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளோர் எண்ணிக்கை 3,12,23,652 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை, 9,64,762ஆக உயர்ந்து உள்ளது.
உலகம் முழுவதும், இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளோர் எண்ணிக்கை 2,28,17,541 ஆக உயர்ந்துள்ளது.
உலக நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் தொடர்ந்து வருகிறது. அங்கு தொற்று பாதிக்கப்பட் டோர் எண்ணிக்கை 7,004,768 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 204,118 என்று உள்ளது. இதுவரை அமெரிக்காவில் தொற்று பாதிப்பில் இருந்து 4,250,140 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போதைய நிலையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,550,510 ஆக அதிகரித்து உள்ளது.
2வது இடத்தை இந்தியா கைப்பற்றி உள்ளது. இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 5,485,612 உள்ளது. இதுவரை 87,909 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை 4,392,650 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 1,005,053 ஆக உள்ளது.
3வது இடத்தில் தொடர்ந்து பிரேசில் நாடு இருந்து வருகிறது. அங்கு கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,544,629 ஆகவும், இதுவரை கொரோனா பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 136,895 ஆகவும் உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 3,851,227 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போதைய நிலையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 556,507 ஆக உள்ளது.
இதேபோல இங்கிலாத்திலும் பாதிப்பு உச்சத்திலேயே இருக்கிறது. அங்கு, பிரிட்டனில் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். எப்படியாவது தங்கள் நாட்டில் பாதிப்பை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், 'இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறுபவர்களுக்கு 13,000 டாலர் வரை அபராதம் விதிக்கப்படும்' என, பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
'ஆரம்பம் முதலே கொரோனா வைரஸை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அலட்சியம் செய்து வந்தார். அவரது அலட்சியத்தால் தான் அதிக பாதிப்புகளை பிரிட்டன் சந்தித்துள்ளது. பாதிப்பு அதிகமாக இருந்த செப்., மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டன. கொரோனா வைரஸை தடுக்கும் முயற்சியில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தோல்வி அடைந்துவிட்டார்' என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், ''பிரிட்டன் இந்த வாரம் கொரோனா பரவலின் இரண்டாம் கட்டத்தை எதிர் கொள்ளும் என, எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே கொரோனா பரவலை தடுக்க சரியான வழி விதிமுறைகளை கடைபிடித்தாக வேண்டும். தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட விதிமுறைகளை மீறுபவர்களுக்கு 13,000 டாலர் வரை அபராதம் விதிக்கப்படும்.
இங்கிலாந்து முழுவதும் கொரோனா பரவலை தடுப்பதற்கு புதிய வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. எனவே தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட விதிமுறைகளை மீறுபவர்களுக்கு 13,000 டாலர்வரை அபராதம் விதிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸைத் தடுக்கும் முயற்சியில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தோல்வி அடைந்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்து வருகிறது. இந்த நிலையில் பிரிட்டனில் செப்டம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும், பொதுவெளியில் 6 பேருக்கு மேல் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மிக அபாயகரமான இந்த வைரஸைக் கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி உலக நாடுகள் எங்கும் வேகமாக நடைபெற்று வருகிறது