Breaking News

இந்திய பெருங்கடலில் இந்தியாவின் வலிமை : சீனாவுக்கு தக்க பதிலடி!

மியான்மர், பாகிஸ்தான் மற்றும் ஈரானில் துறைமுகங்களை வசப்படுத்தி, இந்திய பெருங்கடற்பகுதியில் ஆதிக்கம் செலுத்த நினைக்கும் சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் அந்தமான் நிக்கோபாரில், இந்தியா தனது ராணுவ வலிமையை அதிகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. 

இதன் ஒரு கட்டமாக வடக்கு அந்தமானில் இருக்கும் ஐஎன்எஸ் கொஹாஸ்ஸாவில் உள்ள விமான தளத்தை மேம்படுத்தும் பணி நடக்கிறது. நிக்கோபாரில் உள்ள கேம்பெல் விமான தளத்தை முழு வசதியுடன் கூடிய விமானப்படைத் தளமாக மாற்றும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

மலாக்கா நீரிணை வரையும், மேற்கே ஏடன் வளைகுடா வரையும் நமது கடற்பகுதியை பாதுகாக்கும் வகையில் லட்சத்தீவு தலைநகரான அகாத்தியில் உள்ள விமான தளம் போர்த்திறன் உள்ளதாக மாற்றி அமைக்கப்படுகிறது.

உலகின் மொத்த கடற்வணிகத்தில் பாதிக்கும் மேல் இந்த இரண்டு கடற்பகுதி வழியாக நடக்கும் நிலையில், லட்சத்தீவும், அந்தமான் நிக்கோபாரும் இந்திய கடற்படையின் புதிய போர் விமான தங்கு தளங்களாகவும் உருமாற்றம் பெறுகின்றன.