Breaking News

நாட்டின் முன்னேற்றத்திற்காக புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் – சபாநாயகர்


தேர்தலில் மக்கள் மாற்றம் ஒன்றினை விரும்பிய காரணத் தினால் புதிய அரசாங்கம் உருவாக்கியுள்ளது நாட்டில் ஆரோக்கியமான விதத்தில் மாற்றங்களை முன்னெடுக்க வேண்டுமென்றால் புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பட வேண்டும் என்பது எங்களின் நிலைப்பாடாக உள்ளது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

அத்துடன், நாட்டிற்கு புதிய வேலைத்திட்டங்கள், புதிய தலைமைகள், புதிய கொள்கைகள் வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.

இம்முறை தேர்தலில் மக்கள் மாற்றம் ஒன்றினை விரும் பிய காரணத்தினால் புதிய அரசாங்கம் உருவாக்கி யுள்ளது நாட்டில் ஆரோக்கியமான விதத்தில் மாற்றங் களை முன்னெடுக்க வேண்டுமென்றால் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பது எங்களின் நிலைப்பாடாக உள்ளது.

இப்போது நடைமுறையில் இருக்கும் அரசியலமைப் பானது 19 தடவைகள் திருத்தியமைக்கப் பட்டுள்ளது.

மாற்றங்கள் பல செய்யப்பட்டுள்ளது. பல இணைப்புகள், சட்டங்கள் உள்வாங்கப் பட்டுள்ளது. ஆனாலும் நாடாக நாம் இன்னமும் முன்னேற்றம் காணவில்லை.

எனவே புதிய அரசியல் அமைப்பொன்று உருவாக்கப் படு மாயின் அதில் நாட்டினை ஐக்கியப்படுத்தும் வேலைத் திட்டங்கள் உருவாக்கப்படுமாயின் அதனை நாம் வர வேற்கவேண்டும்.

நாட்டில் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகள் பெற்றுக் கொடு த்து, சகல மக்களும் ஒரே நாட்டுக்குள் ஐக்கியமாகவும், சமாதானமாகும், புரிந்துணர்வுடனும் வாழக்கூடிய சூழ லை உருவாகிக்கொடுத்தால் அதனூடாக நாட்டின் பொரு ளாதாரம் கட்டியெழுப்பப்படும்.

அதனைச் சகலரும் உணர்ந்து பாராளுமன்றத்தில் அதற் கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என் பதை நான் வலியுறுத்துகின்றேன். இந்த விடயத்தில் இன, மத, மொழி பாகுபாடுகளைக் கடந்து இலங்கையர் என்ற உணர்வுடன் சகல மக்களின் பிரதிநிதிகளும் ஒன்றி ணைந்து செயற்பட வேண்டும்.

அரசியல் சுயநலங்களைக் கடந்ததே மக்கள் நலன். அத னைச் சகலரும் பாதுகாக்க வேண்டும் என கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்றார்.