Breaking News

அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றம்!

ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. 

அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் நேற்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் வாசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

வாசிக்கப்பட்டதன் பின்னர் குறித்த பிரகடனம் தொடர்பில் விவாவதங்கள் இடம்பெற்றதை தொடர்ந்து வாக்கெடுப்பின்றி நிறைவேற்றிக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பாராளுமன்றம் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி காலை 9.30 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற சபை அமர்வு இன்று (21) காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது.