Breaking News

வடக்கில் ஹெரோயின் வர்த்தகர்கள் 5 பேர் கைது!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்குவில் மற்றும் இளவாழை பிரதேசங்களில் வைத்து ஹெரோயின் போதைப்பொருளுடன் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நேற்று (23) பிற்பகல் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, சந்தேகநபர்களிடம் இருந்து 67 கிராம் 519 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. 

21 முதல் 38 வயதுக்கிடைப்பட்ட சந்தேகநபர்கள் இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.