டுபாய் சென்றுள்ள சென்னை அணி வீரர்களுக்கு கொரோனா தொற்று!
இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் பங்கு கொள்வதற்காக டுபாய் சென்றுள்ள சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் வீரர் ஒருவருக்கும், அதன் அதிகாரிகள் 10 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்றுக்கு உள்ளான அணி வீரருடன், பயிற்றுவிப்பாளர்கள், உதவியாளர்கள் ஆகியோரும் உள்ளடங்குவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 21 ஆம் திகதி டுபாய் சென்ற அவர்கள், 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், இன்று பயிற்சிகளை ஆரம்பிக்கவிருந்தனர்.
இந்த நிலையில், சிலருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளமையினால், அவர்களுக்கான தனிமைப்படுத்தல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.