Breaking News

‘விக்கி’ இம்முறை தப்பித்துக்கொண்டார்; அடுத்த முறை கவனித்துக்கொள்வோம்; சரத் வீரசேகரா ஆவேசம்!

“விக்னேஸ்வரனின் உரை இனவெறியானது. எதிர்காலத்திலும் நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றுவார் என நம்புகிறேன். அப்போது கவனித்துக் கொள்வோம்” என இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். 

தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையுண்டு, தமிழ்தான் இலங்கையின் மூத்தமொழியென விக்னேஸ்வரன் அண்மையில் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின் சூடு இன்னும் தணியவில்லை. கோட்டா அரசின் உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர நேற்று அது பற்றி கருத்து தெரிவித்தார். 

“விக்னேஸ்வரன் நாடாளுமன்றச் சபாநாயகரை வரவேற்று விக்னேஸ்வரன் உரையாற்றியபோது இனவாதத்தையே பேசினார். அப்போது எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவிக்க முயன்றேன். எனினும், சபாநாயகரை வரவேற்று ஆற்றப்படும் உரைகளை எதிர்ப்பது நாடாளுமன்றப் பாரம்பரியங்களுக்கு எதிரானது என்பதால் என்னால் எதிர்க்க முடியவில்லை. 

விக்னேஸ்வரனின் உரை இனவெறியானது. எதிர்காலத்திலும் நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றுவார் என நம்புகிறேன். அப்போது கவனித்துக் கொள்வோம். விக்னேஸ்வரனின் பேச்சை ஹன்சார்ட் புத்தகத்திலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.