தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய தீர்மானம்!
தமிழ் தேசிய கூட்டமைப்பில் பிரதம அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனையும் ஊடகப் பேச்சாளராக செல்வம் அடைக்களநாதனையும் நியமிக்க மேற்கொண்ட முன்மொழிவிற்கான ஒப்புதலை நாடாளுமன்ற குழு கூட்டத்தின் போது பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் அண்மையில் இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது இது தொடர்பான முன்மொழிவு முன்வைக்கப்பட்டது.
இது தொடர்பில் எதிர்வரும் நாடாளுமன்ற குழு கூட்டத்தின் போது பிரஸ்தாபிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வினோகராதலிங்கம் தெரிவித்தார்.