உங்கள் தொலைபேசி இலக்கத்தை மாற்றம் செய்ய ஒரு அரிய வாய்ப்பு!
தொலைபேசி இலக்கத்தை மாற்றம் செய்யாமல் தொலைதொடர்பு சேவை வழங்குனரை மாற்றுவதற்கான வாய்ப்பை பாவனையாளர்களுக்கு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பாவனையாளர்களின் தேவையின் அடிப்படையில் தொலைபேசியில் பயன்படுத்தும் சிம் அட்டையை மாற்றம் செய்யாமல் தொலைதொடர்பு சேவை வழங்குனரை மாற்றம் செய்வதற்காக இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது.