பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை வென்றது இங்கிலாந்து!
இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிரா ஆனதை தொடர்ந்து, 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.
சவுதாம்ப்டனில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 583 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி வெறும் 273 ரன்களுக்கு முதல் இன்னிங்சில் சுருண்டது.
310 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஃபாலோ ஆன் பெற்று பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய நிலையில், 5வது நாள் ஆட்டத்திலும் அவ்வப்போது மழை குறுக்கிட்டது.
அந்த அணி 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 5வது நாள் ஆட்டம் முடிவு பெற்றதை அடுத்து ஆட்டம் டிரா ஆனது.
இந்த போட்டியில் அசார் அலியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்டுக்கள் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை ஜேம்ஸ் ஆண்டர்சன் பெற்றார்.
இதையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என இங்கிலாந்து கைப்பற்றிய நிலையில், ஜாக் கிராவ்லி ஆட்ட நாயகன் விருதையும், ஜாஸ் பட்லர் தொடர் நாயகன் விருதையும் பெற்றனர்.