Breaking News

கூட்டமைப்பின் சறுக்கலிற்கு சுமந்திரனின் கருத்துக்களும் காரணம் - சம்பந்தன்!

அண்மைய தேர்தல்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஏற்பட்ட சறுக்கல்களிற்கு எம்.ஏ.சுமந்திரனின் கருத்துக்களும் ஒரு காரணம் என்பதை, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களிற்கிடையிலான கலந்துரையாடல் நேற்று (21) இரவு இடம்பெற்றது. இதன்போது, கூட்டமைப்பின் பேச்சாளர் மற்றும் கொரடாவை மாற்றுவதென தீர்மானிக்கப்பட்டிருந்தது. 

இந்த கலந்துரையாடலின் ஆரம்பத்தில், தேர்தல் சறுக்கல் குறித்து ஆராயப்பட்டது. இதன்போது எம்.ஏ.சுமந்திரனின் கருத்துக்கள் தொடர்பாகவும் பிரஸ்தாபிக்கப்பட்டது. “வெளிநாடுகளிலுள்ள எமது ஆதரவாளர்களிடமும் அந்த கருத்து தீவிரமாக உள்ளது. 

என்னிடமும் அதைப்பற்றி பேசியுள்ளனர். தேவையற்ற சில சச்சரவுகளை அவர் உருவாக்குகிறார். அது பற்றி பல முறை அவரிடம் கூறியிருக்கிறேன். பொதுத்தேர்தலின் பின்னர் பலர் என்னைச்சந்தித்து இது பற்றி கூறியிருக்கிறார்கள்“ என்றார்.