Breaking News

அரசாங்க அச்சுத் திணைக்களம் மூலம் முக்கிய ஆவணங்களை அச்சிட நடவடிக்கை!

தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய அச்சுப் பணிகள் அனைத்தையும் அரசாங்க அச்சுத் திணைக்களம் மூலம் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அமைச்சில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, இது தொடர்பில் அமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். 

அரசாங்க அச்சுத் திணைக்களத்தின் முன்னேற்றம் குறித்து இந்தக் கலந்துரையாடலில் ஆராயப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக, வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை அச்சிடுவதற்கான வசதிகளை முதலாவதாக ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

தற்போதுவரை, முத்திரைகள், வாக்குக்சீட்டுக்ள், விசா ஸ்ரிக்கர்கள் உள்ளிட்டவை அரசாங்க அச்சுத் திணைக்களத்தின் டூலம் அச்சிடப்படுகின்றன. 

இந்த நிலையில், எதிர்காலத்தில் அரசாங்க அச்சுத் திணைக்களம் மூலம் தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம் என்பனவற்றையும் அச்சிடுவதற்கு நடவடிக்கை எடுப்பதன் மூலம், பாரியளவான நிதியை சேமிக்க முடியும் என குறித்த கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.