உறவுகளுக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் திரண்ட தமிழர்கள்(படங்கள்)
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று(ஆகஸ்ட் 30) பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் ஈழத்தமிழர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.
இறுதிப்போர் நடைபெற்ற போதும் அதற்கு அண்மைய காலப்பகுதியிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இலங்கையிலும் புலம்பெயர் தேசத்திலும் கவனவீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அதே சமயம் இலங்கையில் நடந்த போர் காரணமாக கடத்தியும், கைது செய்தும் கொண்டு செல்லப்பட்ட தமிழர்களுக்கு இன்றுவரை என்ன நடந்தது அறியாமல் அவர்களுக்கு நீதி வேண்டி உலகில் வாழும் தமிழர்களும் போராடி வருகிறார்கள் அதன் ஓர் அங்கமாக பிரித்தானியாவில் இன்று காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு மாபெரும் நீதிப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.