சட்டங்கள் பலவற்றை மறுசீரமைக்க நடவடிக்கை
நீண்டகாலமாக தொழிலாளர்களுக்கு பாதிப்பாக உள்ள சட்டங்கள் பலவற்றில் திருத்தம் மேற்கொள்ளப்படவிருப்பதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்று (25) முற்பகல் தொழில் திணைக்களத்தில் இடம்பெற்ற அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
தொழில்புரியும் பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு பல தடைகள் காணப்படுகின்றன.
அவற்றை நீக்குவதற்காக வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)