Breaking News

"நாங்க இப்போ மூணு பேர்" - விராட் கோலி, அனுஷ்கா சர்மா தம்பதி அறிவிப்பு!


இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விரைவில் தந்தையாக உள்ளார். இந்த தகவலை விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா சமூகவலைதளங்களின் வழியே பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிபடுத்தி உள்ளனர். 

விராட் கோலி, அனுஷ்கா சர்மா ஜோடி, 2017ம் ஆண்டு காதல் திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களது திருமணம் இத்தாலியில் பிரம்மாண்டமாக நடந்தமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், கணவர் விராட் கோலியுடன் உள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அனுஷ்கா ஷர்மா, தான் கர்ப்பமாக உள்ளதாக அறிவித்துள்ளார். 

நாங்கள் இப்போ மூணு பேர் என்றும் 2021 ஜனவரியில் குழந்தை பிறக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். திரையுலகினர், கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.