நேற்று 16 பேருக்கு கொரோன தொற்று!
நாட்டில் நேற்று 16 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.
இந்தியாவின் சென்னையில் இருந்து நாடு திரும்பிய 16 பேருக்கே இவ்வாறு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 918 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை கொவிட் 19 தொற்றிலிருந்து மேலும் 5 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து நேற்று வெளியேறியுள்ளனர்.இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 765 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன் கொவிட் 19 தொற்றுதியான 142 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.