Breaking News

கொரோனா வைரசுடன் எப்படி வாழ்வது என்பதை கற்றுக் கொள்ள வேண்டும் - WHO


கொரோனா வைரசுடன் எப்படி வாழ்வது என்பதை மக்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதாநாம் கெப்ரிசியஸ் கூறியுள்ளார். 

ஜெனீவாவில் காணொலி செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், கொரோனா தொற்று என்பது வாழ்க்கை ஒரு புள்ளியில் முடிந்துவிட்டது என்பது அல்ல என கூறினார். பல நாடுகளில் கொரோனா தொற்று பரவ இளைஞர்கள் ஒரு முக்கிய காரணமாக இருப்பதாக அவர் கூறினார். 

சமுதாயத்தை காக்க வேண்டிய இளைஞர்கள் அதில் இருந்து தவறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இளைஞர்களும் நோயால் வெல்ல முடியாதவர்கள் அல்ல என்று கூறிய அவர், அவர்களும் மற்றவர்களைப் போல உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளவேண்டும் என்றார்.