யாழ்.நல்லூர் உற்சவம் - மக்களுக்கான வேண்டுகோள்!
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை (25) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று (24) இடம்பெற்றது.
செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை சம்பிரதாயப் பூர்வமாக ஆலயத்தில் ஒப்படைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாகும்.
நல்லூரிலுள்ள செங்குந்த மரபினர் வருடா வருடம் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலையை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதன் படி யாழ். சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் காலை 9 மணிக்கு நடைபெற்ற விஷேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து அங்கிருந்து கொடிச்சீலை சிறிய ரதத்தின் மூலம் பருத்தித்துறை வீதி ஊடக எடுத்து செல்லப்பட்டு காலை 9.30 மணி அளவில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினை வந்தடைந்தது.
அங்கு ஆலயத்தின் வெளிவீதி உலா சென்று சுபநேரத்தில் பூஜைகள் இடம்பெற்று கொடிச்சீலை நல்லூர் ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டது.
நாளை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பம் ஆகும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் நல்லூர் ஆலயத்திற்கு வரும் அடியவர்கள் அடையாள அட்டை கொண்டு வருவது அவசியம் என யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
நல்லூர் ஆலய உற்சவத்திற்கு வரும் அடியவர்கள் அனைவரும் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விசேட சோதனை சாவடியில் அடையாள அட்டையினை காண்பித்தே ஆலயத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு வெளிநாட்டிலிருந்து வருபவராக இருந்தால் அவர் தனிமைப்படுத்தலுக்குட்பட்டவர் என்ற சான்றிதழை காண்பித்த பின்னரே ஆலயத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு ஆலயத்திற்கு வரும் அடியவர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து ஆலயத்திற்கு வருகை தர வேண்டும். அத்தோடு சுகாதார நடைமுறையினை பின்பற்றும் முகமாக கைகளை நன்றாகக் கழுவி உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அடையாள அட்டையினை காண்பித்து அடையாள அட்டை மற்றும் அவர்களது முகம் கமராவில் பதிவு செய்யப்பட்ட பின்னரே ஆலயத்துக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ மேலும் தெரிவித்துள்ளார்.