Breaking News

இணையத்தின் ஊடாக பிறப்புச் சான்றிதழ்!

இணையத்தின் ஊடாக பிறப்புச் சான்றிதழ் பெற்றுக் கொள்வதற்கு எதிர்வரும் நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக பதிவாளர் நாயகம் என்.சி விதானகே தெரிவித்துள்ளார்.


அத்துடன் காணிப் பதிவு சான்றிதழையும் இணையத்தின் ஊடாக வழங்கும் நடவடிக்கை அடுத்த மாதம் முதல் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதனூடாக காணிப்பதிவுகளை அவசரமாக செய்து கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.