பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் நபர் ஒருவருக்கு கொரோனா!
பொலன்னறுவ, லங்காபுர பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் நபர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த நபர் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2811 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்குள்ளான இதுவரையில் 2333 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது, 467 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இதுவரை 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.