நடிகை வனிதா அளித்த புகாரில், யூடியூப் பெண் பிரபலம் சூர்யாதேவி கைது!
சமூக வலைதளங்களில் தனது திருமணம் குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பி வந்ததாக நடிகை வனிதா அளித்த புகாரில், யூடியூப் பெண் பிரபலம் சூர்யாதேவி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நடிகை வனிதா சமீபத்தில் 4வதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், பீட்டர்பால் முறையாக விவகாரத்து பெறாமல் மறுமணம் செய்து கொண்டதாக அவரது முதல்மனைவி போலீசில் புகாரளித்தார்.
இந்நிலையில் வனிதாவின் திருமணம் குறித்தும், அவரது கணவர் குறித்தும் சூர்யாதேவி என்ற பெண் யூடியூப்பில் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு, அவதூறு பரப்பி வருவதாக புகார் அளித்தார்.
மேலும் சூர்யா தேவி தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், வனிதா தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த வடபழனி மகளிர் போலீசார் சூர்யாதேவியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.