Breaking News

பிறந்தநாளுக்கு காரிலேயே பிக்னிக், பார்ட்டி கொண்டாடிய வனிதா: வீடியோ

நடிகை வனிதா விஜயகுமார் கடந்த மாதம் 27 ஆம் தேதி தன்னுடைய வீட்டில் எளிமையான முறையில் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அதற்கு பிறகு வெளியில் வந்த அவர் சொந்தமாக ஒரு யூடியூப் சேனல் ஒன்றை துவங்கி பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவரது வீடியோக்களுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வந்தது. அந்த சேனல் நடத்துவதற்கு உதவிய பீட்டர் பால் என்பவருடன் அவருக்கு காதல் ஏற்பட்ட நிலையில், தனது மகள்களின் அனுமதியுடன் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார் வனிதா. அதற்குப் பிறகு தொடங்கிய சர்ச்சைகள் நான்கு வாரங்களாக தற்போதும் தொடர்ந்து வருகிறது. 
யூடியூபில் வனிதா பற்றி மோசமாக விமர்சித்த சூர்யா தேவி என்ற பெண் மீது வனிதா அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் கஸ்தூரி ஆகியோருடன் தொடர்ந்து வனிதா மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார் வனிதா. 

சில தினங்களுக்கு முன்பு வனிதா ட்விட்டரில் இருந்து வெளியேறி இருந்தார். அதற்கு முன்பு தன்னுடைய ஒரு ட்விட்டில் வனிதா நயன்தாரா பிரபுதேவாவுடன் வாழ்ந்தது பற்றி குறிப்பிட்டு பேசியிருந்தார். இதனால் கோபமான நயன்தாரா ரசிகர்கள் வனிதாவை தாக்கி பேசினர். இதன் காரணமாகத் தான் வனிதா ட்விட்டர் விட்டே வெளியேறினார் என சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. 



இந்நிலையில் தற்போது மீண்டும் ட்விட்டருக்கு திரும்பியுள்ள வனிதா பல விஷயங்களை பதிவிட்டு வருகிறார். நேற்று பீட்டர் பாலின் பிறந்தநாளுக்காக காரில் பிக்னிக் சென்றதாக குறிப்பிட்டு ஒரு வீடியோவை வனிதா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் வனிதா அவரது மகள்கள் மற்றும் பீட்டர் பால் என அனைவரும் இருக்கின்றனர். 


மேலும் பல யூடியூப் சேனல்களில் வனிதா மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் இடையே உள்ள பிரச்சினை பற்றி பேசியே பலர் அதிகம் பார்வைகளை அள்ளுகின்றனர் என ஒரு நபர் குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலளித்து இருந்த வனிதா விஜயகுமார், "அவர்களுக்கு இந்த நிஜ உலகத்தில் என்ன நடக்கிறது என்கிற ஐடியாவே இல்லை. காரித் துப்புறாங்க அவங்க எல்லாரையும்.. இருக்கட்டும்.. இது போன்ற மோசமான நேரங்களில் என் பெயரை வைத்து அவர்களுக்கு உணவு கிடைக்கட்டும். இதுவும் கடந்து செல்லும்" என தெரிவித்துள்ளார்.