ட்விட்டரில் இருந்து வெளியேறிய வனிதா: (அ)சிங்கப்பெண் எங்கே ஓடிட்டாங்க - கஸ்தூரி?
பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டதில் இருந்து வனிதா விஜயகுமாரை சமூக வலைதளங்களில் பலரும் பல மாதிரி விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். தன்னை விமர்சித்து ட்வீட் போடுபவர்களுக்கு தக்க பதிலும் கொடுத்து வந்தார் வனிதா.
இந்நிலையில் வனிதா, லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோர் வீடியோ கால் மூலம் கொடுத்த பேட்டி பிரச்சனையில் முடிந்தது. இதை பார்த்த சமூக வலைதளவாசிகள் வனிதா, லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மற்றும் பேட்டி எடுத்த நபரையும் மரண கலாய் கலாய்த்தனர்.
லக்ஷ்மி ராமகிருஷ்ணனுக்கு ஆதரவாக ட்வீட் செய்த கஸ்தூரியையும் வனிதா திட்டினார். மேலும் கஸ்தூரி ட்விட்டரில் தன்னை பின்தொடராமல் இருக்க அவரை பிளாக் செய்தார். இன்றும் கூட தன்னை விமர்சித்தவர்களை விளாசிக் கொண்டிருந்தார் வனிதா.
எலிசபெத் ஹெலனுக்கு ஆதரவாக ட்வீட் செய்பவர்களை பார்த்து நீங்கள் என்ன செய்தாலும் பலனில்லை, அவருக்கு மீண்டும் வாழ்க்கை கிடைத்துவிடுமா என்று கேட்டார்.
தொடர்ந்து ட்வீட் செய்து கொண்டிருந்த வனிதா திடீர் என்று ட்விட்டரில் இருந்து வெளியேறியுள்ளார். வனிதா ட்விட்டரில் இருந்து வெளியேறியதை பார்த்த கஸ்தூரி கூறியிருப்பதாவது,
என்னாச்சு? (அ)சிங்கப்பெண் எங்கே ஓடிட்டாங்க? ஏதாவது காக்காவை பார்த்து பயமா இல்லை உண்மைக்கு பயமா?. இப்பொழுது உங்களுக்கு தெரியும். யார் தைரியசாலி, யார் காமெடி பீஸ் என்பதை முடிவு செய்யும் பிக்கஸ்ட் பாஸ் நீங்கள் தான்.ennaachu ? (A)singapenn enge odittaanga ? Afraid of any 'kaakaa' or afraid of the truth?
— Kasturi Shankar (@KasthuriShankar) July 21, 2020
Now u know. You are the Biggest Bosses who decide who is bold and who is comedy piece.
ONLY the TRUTH on #KonnectWithKasthuri#SupportElizabethHelen #RespectLakshmiRamakrishnan pic.twitter.com/wOTuUiBFOT
அமைதியாக இருக்குமாறு லக்ஷ்மி மேடம் தான் எனக்கு அறிவுரை வழங்கினார். ஆனால் இனியும் முடியாது. ஒரு பெண்ணை மோசமாக பேசி, அவரின் கேரக்டரை அசிங்கப்படுத்துவது குற்றம். திருப்பிக் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இது நீதிக்கான நேரம் என்று தெரிவித்துள்ளார்.
வனிதா தன்னை திட்டியதை பார்த்த கஸ்தூரி தானும் யூடியூப் சேனல் துவங்கப் போவதாக கூறினார். இதையடுத்து Konnect with Kasthuri என்கிற யூடியூப் சேனலை துவங்கியுள்ளார். அந்த யூடியூப் சேனலில் இன்று மாலை வனிதா பற்றிய விவாதம் நடக்கவிருக்கிறது.

நேற்றில் இருந்து ட்விட்டரில் படு ஆக்டிவாக இருந்த வனிதா ஏன் இப்படி திடீர் என்று தலைமறைவாகிவிட்டார் என்று சமூக வலைதளவாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். வனிதா இன்று நயன்தாராவை பற்றி ட்வீட் போட்டார். அதன் பிறகு அவர் ட்விட்டிரில் இருந்து வெளியேறிவிட்டார். இதில் இருந்தே தெரிய வேண்டாமா, தலைவியை தொட்டால் அவ்வளவு தான் என்று. நயன்தாரா தான் கெத்து என அவரின் சிகர்கள் தெரிவித்துள்ளனர்.
வனிதா ட்விட்டரில் இருந்து தான் வெளியேறிவிட்டார். ஆனால் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாகத் தான் இருக்கிறார். வனிதாக்கா, நீங்கள் தான் தைரியமான ஆளாச்சே, இந்த கஸ்தூரி, லக்ஷ்மி ராமகிருஷ்ணனுக்காகவா ட்விட்டரில் இருந்து வெளியேறிவிட்டீர்கள். நீங்கள் ஏதோ அவர்களுக்கு பயந்து ஓடிவிட்டது போன்று பேசுவார்களே என வனிதாவின் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.
இதற்கிடையே வனிதாவும், பீட்டர் பாலும் ஜோடியாக சேர்ந்து பேட்டி கொடுத்தனர். அந்த பேட்டியிலும் அவர்கள் லிப் டூ லிப் முத்தம் கொடுத்தனர். அந்த வீடியோவை பார்த்தவர்கள் பேட்டி எடுத்தவர்களை திட்டிக் கொண்டிருக்கிறார்கள். வனிதா, பீட்டர் பாலின் லிப் டூ லிப் முத்த புகைப்படத்தை பார்த்த லக்ஷ்மி ராமகிருஷ்ணனும் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.