டி.வி.யில் நேரலை..நெறியாளரின் மனைவி நிர்வாணமா நடந்து சென்றதால் பரபரப்பு!
பிரேசில் நாட்டில் வீட்டில் இருந்தபடியே நெறியாளர் ஒருவர் டி.வி. நேரலையில் பேசிக்கொண்டிருக்கும் போது, அவரது மனைவி நிர்வாணமாக நடந்து சென்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, உலகம் முழுவதும் அனைத்து தொழில்களும் முடங்கி உள்ளன. இதனால், அனைத்து தரப்பு மக்களும், தங்கள் வீடுகளில் முடங்கிப் போய் உள்ளனர். பெரும்பாலான நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
பல தனியார் நிறுவனங்கள் பணிபுரிவோர், தங்கள் வீட்டில் இருந்த படியே “Work from home”ல் இருந்த படியே பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக, ஐ.டி நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்களில் பணிபுரிவோர், தங்கள் வீட்டில் இருந்தபடியே பணியாற்றி வருகின்றனர். அதற்கு ஊடகமும் விதிவிலக்கல்ல.
எனினும், “Work from home”ல் இருந்த படியே பணியாற்றுவோர், தங்கள் உயர் அதிகாரிகளிடம் வீடியோ காலில் பேசி உரையாடுவது வாடிக்கை. அப்படி, வீடியோ காலில் பேசும் போது, சில நேரங்களில் வீட்டில் விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகள் மற்றும் வீட்டில் செல்லமாக வளர்க்கப்படும் நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளால் தொந்தரவுகளும் நிகழ்வது வாடிக்கையாக நடந்து வருகிறது. ஆனால், அதையும் பொருட்படுத்தாமல் தான், பலரும் வீடியோ காலில் தற்போது பேசி வருகின்றனர்.
அப்படி, பிரேசில் நாட்டில் வீட்டில் இருந்தபடியே நெறியாளர் ஒருவர் டி.வி. நேரலையில் பேசிக்கொண்டிருந்தார். குறிப்பாக, பிரேசில் நாட்டின் செய்தியாளர் ஃபேபியோ போர்சாட், தன்னுடைய இன்ஸ்டாக்ராம் பக்கம் மூலமாக அந்நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ஒருவருடன் வீடியோ நேரலையில் பேட்டி எடுத்துக்கொண்டு இருந்தார்.
அந்த தருணத்தில் டி.வி.யின் நெறியாளரும், முன்னாள் குடியரசுத் தலைவர் வேட்பாளரும் அந்நாட்டின் அரசியல் சூழல் குறித்து, மூச்சு முட்ட சீரியசாக பேசிக் கொண்டிருந்தார்கள்.
அந்த நேரம் பார்த்து, நெறியாளரின் வீட்டில், அவருடைய மனைவி குளித்து விட்டு, நிர்வாணமாகத் தலையில் டவல் ஒன்று கட்டிக்கொண்டு, டி.வி.யில் நேரலையில் பேசிக்கொண்டிருக்கும் நெறியாளரின் பின்னால் நடந்து சென்றுள்ளார்.
அப்போது, தன் கணவர் டி.வி.யில் நேரலையில் வீடியோ மூலம் பேசிக்கொண்டிருப்பதை அறிந்த அவரின் மனைவி, திடீரென்று, அந்த இடத்தில் குனிந்து கொண்டே, கேமராவில் தெரியாதபடி தவழ்ந்து தவழ்ந்து செல்ல முயன்றுள்ளார்.
இதனை நேரலையில் பார்த்த அந்த அரசியல் பிரமுகர் கடும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர், சுதாரித்துக்கொண்டு, நெறியாளர் மனைவியைப் பார்த்த அந்த அரசியல் பிரமுகர் சிரித்துக் கொண்டே “யாரோ உங்கள் பின்னால் நிர்வாணமாக நடந்து செல்கிறார்” என்று அவர் கூறி உள்ளார்.
இதனால், திகைத்துப் போன அந்த நெறியாளர், திரும்பிப் பார்த்துள்ளார். அப்போது, அவரின் மனைவி உடலில் ஆடை இன்றி குளித்து முடித்த தோற்றத்தில் நிர்வாணமாக அங்கே கீழே அமர்ந்தபடியே தவழ்ந்து சென்றதைப் பார்த்து, அவரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர், “உன்னை அனைவரும் நேரலையில் பார்த்து விட்டனர்” என்று, அவர் தன் மனைவியிடம் கூறினார். இதனையடுத்து, வெட்கப்பட்டுக்கொண்டே அவர் தன் அறைக்கு ஓடிச் சென்று அறையின் கதவைச் சாத்தி உள்ளார்.
டி.வி. நேரலையில் மிகவும் சீரியசாக நடந்த அரசியல் தொடர்பான உரையாடலின் போது, ஒரு பெண் நிர்வாணமாகக் கடந்து சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.