Breaking News

கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை!

கொரொனா வைரஸ் தாக்கம் காரணமாக மேலதிக விடுமுறை வழங்கப்பட்டிருந்த பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 11, 12 மற்றும் 13 ஆம் தரங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் மாத்திரமே இன்றைய தினம் பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.

அவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் காலை 7.30 முதல் பிற்பகல் 3.30 வரையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், ஏனைய தரத்தில் பயிலும் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஒகஸ்ட் 10 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் பொதுத்தேர்தலில் வாக்களிப்பு நிலையங்களாக பயன்படுத்தப்படவுள்ள பாடசாலைகளை தயார் படுத்துவதற்காக குறித்த பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் உப அதிபர்கள் நாளைய தினம் முதல் எதிர்வரும் 31 ஆம் திகதிவரை பாடசாலைகளுக்கு சமூகமளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த நாட்களில் மாணவர்களின் கல்வி செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தேர்தல் பணிகளை முன்னெடுக்குமாறும் அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.