300 பக்தர்களுடன் நல்லூர் திருவிழா?
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாள்கள் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் ஆலயத் திருவிழாவில் அதிகளவு பக்தர்களை கலந்துகொள்ளச் செய்வது தொடர்பில் இன்றைய கொவிட்-19 அனர்த்த நிலையில் சிறப்பு அமர்வு ஒன்று யாழ் மாநகரசபையில் நடைபெற்றிருந்தது.
அமர்வின் முடிவில் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் ஆலய பெரும் திருவிழாவிற்கு 300 பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று யாழ்.மாநகர பதில் முதல்வர் து.ஈசன் தெரிவித்தார்.
அங்கப்பிரதஸ்டை, காவடி, அன்னதானம், தண்ணீர் பந்தல் மற்றும் வியாபார நடவடிக்கைகளுக்கு முழுமையான தடை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
யாழ்.மாநகர சபையில் இன்று செவ்வாய்கிழமை 21.07.2020 நடந்த விசேட அமர்வில் பொது சுகாதார பரிசோதகர்களாலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அன்னதானம், வியாபார நிலையங்கள், தண்ணீர் பந்தல்கள் போன்றவற்றினையும் இம்முறை தடை செய்யப்படவுள்ளதாகவும் பதில் முதல் மேலும் தெரிவித்தனர்.