வட கொரியாவில் இருந்து கொரோன தொற்று பதிவாகியுள்ளது!
கோவிட் -19 தொடர்பான முதல் சந்தேகம் புகார் செய்யப்பட்டதை அடுத்து, வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் என்று கொரிய மத்திய செய்தி நிறுவனம் (கே.சி.என்.ஏ) தெரிவித்துள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தென் கொரியாவுக்கு தப்பிச் சென்ற ஒருவர் ஜூலை 19 ம் தேதி சட்டவிரோதமாக கெய்சோங் நகரம் வழியாக வட கொரியாவுக்குள் நுழைந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
செய்தி நிறுவனத்தின்படி, மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு நோயாளி தனிமைப்படுத்தப்பட்டதாகவும், சமீபத்தில் அவருடன் தொடர்பு கொண்ட அனைவருமே தனிமைப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெசோங்கைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு கிம் ஜாங் உன் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், ஒவ்வொரு பகுதியிலும் அவசரகால நிலையை அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், வட கொரியாவின் மத்திய பாதுகாப்பு ஆணையம் நோயாளியை சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்ததற்கு விசாரணை செய்து தண்டிக்கும் என்று செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.