Breaking News

பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ளது!

பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் உதவி தேரதல் ஆணையாளர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடாத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.


எதிர்வரும் 26 ஆம் திகதி குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதன்போது, தபால் மூல வாக்களிப்பு சதவீதம் தொடர்பில் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டு, தேவையேற்படின் தபால் மூல வாக்களிப்பிற்காக மேலும் ஒரு தினத்தை பெற்றுக் கொடுக்க எதிர்ப்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரச ஊழியர்கள் கட்டாயமாக தேர்தல் கடமைகளில் பங்கேற்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.