Breaking News

2020 O/L பரீட்சை விண்ணப்பதாரிகளுக்கான அறிவித்தல்!

2020 கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றுவதற்கான விண்ணப்பங்கள் பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரிகளிடம் இருந்து கோரப்பட்டுள்ளது.


அறிக்கை ஒன்றை வௌியிட்டு பரீட்சைகள் ஆணையாளர் நாகம் பீ.சனத் ஜயசூரிய இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி, 2020-07-22 முதல் 2020-08-31 திகதி வரையில் குறித்த விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை அனைத்து விண்ணப்பதாரிகளும் இணைய வழி ஊடாகவே விண்ணப்பிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk க்கு பிரவேசித்து குறித்த அறிவுறுத்தல்களை நன்கு ஆராய்ந்து இணையவழி ஊடாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.