தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம் - 17 ஆம் திகதி வரை நடைபெறும்!
பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (13) முதல் எதிர்வரும் திகதி 17 திகதி வரை பல கட்டங்களாக இடம்பெறுகின்றன.
அதற்கமைய பிரதேச சுகாதார பணியாளர்கள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்களிக்கின்றனர்.
சமூக இடைவெளியை பேணல், முகக் கவசங்களை அணிதல், கைகளை கிருமி தொற்று நீக்கம் செய்துக்கொள்ளல் ஆகிய சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
வாக்களிக்க நீலம் அல்லது கறுப்பு நிற பேனைகளை எடுத்து வருவது சிறந்தது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
நாளையும் (14) நாளை மறுதினமும் (15) அரச நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தாபால்மூலம் வாக்களிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அதேபோல், எதிர்வரும் 16 ஆம், 17 ஆம் திகதிகளில் மாவட்ட செயலகங்கள், தேர்தல்கள் செயலகம், பொலிஸார், இராணுவம், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினர், சுகாதார ஊழியர்கள் ஆகியோர் வாக்களிக்க முடியும்.
மேற்குறித்த தினங்களில் தபால்மூலம் வாக்களிக்க தவறுவோர் எதிர்வரும் 20 ஆம், 21 ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அநுராதபுரம் ராஜாங்கனை பிரதேச செயலாளர் காரியாலயத்திற்கு உட்பட்ட பகுதிகளயில் தபால்மூல வாக்களிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அந்த பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அநுராதபுரம் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிஆர்.எம். வன்னிநாயக்க கூறியுள்ளார்.
இந்த பகுதியில் மீண்டும் தேர்தல் நடைபெறும் திகதி தேர்தல்கள் திணைக்களத்தால் மீள அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.