வவுனியாவில் 14 வயது சிறுவனை காணவில்லை!
வவுனியா, சாம்பல் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனை காணவில்லை என வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா, சாம்பல் தோட்டம், தம்பனை புளியங்குளம் பகுதியில் தனது உறவினர்களுடன் வசித்து வந்த 14 வயதுடைய விஜேந்திரன் பிரசாத் என்ற சிறுவன் நேற்று (15) உறவினர் வீட்டில் இருந்து கடைக்கு சென்ற நிலையில் வீடு திரும்ப வில்லை.
இதனையடுத்து குறித்த சிறுவனை இரவு வரை தேடிய உறவினர்களும், அயலவர்களும் சிறுவன் கிடைக்காமையால் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர்.