கொடுமையிலும் கொடுமை சுமந்திரனின் கொடுமை(காணொளி)
சுமந்திரனால் சிறிலங்கா சிறையில் அடைக்கப்பட்டுள்ள 13சந்தேகநபர்களில் முதல் நான்கு நபர்கள் தொடர்பான உண்மையினை போட்டுடைத்திருக்கிறார் ஆனந்தசங்கரி அவர்கள்.
இதில் சுமந்திரனுக்கு உயிர் அச்சுறுத்தல் என கைதுசெய்யப்பட்ட முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் மிகவும் பாதிக்கப்பட்ட ஊனமுற்ற போராளிகள் எனத் தெரியவந்துள்ளது.
இதில் முதலாவது நந்தேக நபருக்கு மணிக்கட்டுடன் ஒரு கை இல்லாதவர் என்றும், இரண்டாவது நபர் தோள்மூட்டுடன் முழுமையாகவே கையினை இழந்தவர் என்றும்,அடுத்தவர் இறுதிப்போரில் மிகமோசமாக காயமடைந்து மூன்று மாதங்கள்வரை சுயநினைவற்று இருந்த ஒரு போராளி என்றும் நான்காம் நபர் மிகவும் வறிய குடும்பத்தை சேர்ந்தவராகவும் அவரது மூன்றுவயதுக் குழந்தை இதயத்தில் துவாரம் ஏற்பட்டதால் உயிருக்கு போராடிக்கொண்டுள்ளார் எனவும் அவர்களை நேரில் சந்தித்த த.வி.கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சுமந்திரனால் சிறையிலுள்ள 13பேரினது வரலாறுகளும் பதியப்பட்டிருக்கின்றவேளை சுமந்திரன் இப்போதும் முன்னரைவிட இன்னும் மேலதிகமான சிங்கள விசேட அதிரடிப்படை பாதுகாப்புடன் அதே வன்னி மண்ணில் இன்றும் வாக்கு வேட்டையில் இறங்கியிருந்தமை