Breaking News

சற்று முன்னர் மேலும் ஒருவருக்கு கொரோனா.! - 12 வயதுடைய சிறுவனுக்கு

சற்று முன்னர் இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த 12 வயதுடைய சிறுவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்பொழுது இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2688 ஆக அதிகரித்துள்ளது.