16 மாத பெண் குழந்தை பாலியல் துஷ்பிரயோகம்: சித்தப்பா கைது - குழந்தை மரணம்
நீர்கொழும்பு, பழைய சிலாபம் வீதியில் அபின் பாலம் அருகில் வைத்து ஒரு வயதும் நான்கு மாதம் நிரம்பிய பெண் குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த குற்றச்சாட்டில் 22 வயதுடைய குழந்தையின் சித்தப்பா முறையானவரை நீர்கொழும்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
22 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டவராவார்.
சந்தேக நபர் புத்தளத்தை சேர்ந்தவராவார். உயிரிழந்த குழந்தையின் தாய் சந்தேக நபரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இவர்கள் பழைய சிலாபம் வீதியோரத்தில் யாசகர்களாக தங்கி வாழ்பவர்களாவர்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு குறித்த பாலம் அருகில் வைத்து சந்தேக நபர் குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவிட்டு பெரியமுல்லை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மலசல கூடத்தில் குழந்தையை குளிப்பாட்டியுள்ளார். இதனையடுத்து குழந்தை சுகயீனமடைந்துள்ளது.
பின்னர் குழந்தை நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது. இதன்போது குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைளடுத்து சந்தேகநபர் இன்று (16) நீர்கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.