முன்னாள் போராளிகள் மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நிலை!
முன்னாள் போராளிகள் மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நிலை உருவாக்கப்பட்டுள்ளதாக முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முதன்மை வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
பளை பிரதேசத்தில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வீடுகளுக்கு செல்லும் புலனாய்வாளர்களால் முன்னாள் போராளிகள் அச்சுறுத்தப்படுகிறார்கள். அத்தோடு அவர்களின் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றது. இதனால் முன்னாள் போராளிகளின் குடும்பங்கள் மிகவும் அச்சத்தில் வாழ்ந்து வருவதாக தெரிவித்தார்.
முன்னாள் போராளிகள் மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. 2009 யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இருந்த நிலைமையை போன்று தற்போதும் முன்னாள் போராளிகள் அச்சுறுத்தப்படும் நிலை இங்கே உருவாகியுள்ளது.
வீடுகளுக்கு செல்லும் புலனாய்வாளர்களால் முன்னாள் போராளிகள் அச்சுறுத்தப்படுகிறார்கள். அத்தோடு அவர்களின் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றது. இதனால் முன்னாள் போராளிகளின் குடும்பங்கள் மிகவும் அச்சத்தில் வாழ்ந்து வருவதாக தெரிவித்தார்.
எனினும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் எந்த ஒரு அச்சுறுத்தலும் இல்லாது முன்னாள் போராளிகளுக்கான வேலைவாய்ப்புகள் மற்றும் பல்வேறுபட்ட செயல் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுநிலையில் தற்போதைய காலப்பகுதியில் முன்னாள் போராளிகள் கடும் அச்சுறுத்தல் உள்ள நிலையை காணக்கூடியதாகவுள்ளது என கூறியுள்ளார்.