புலிகளை மீள உருவாக்கா முயன்ற குற்றச்சாட்டில் தமிழ் இளைஞர்கள் இரகசிய கைது!
தேர்தல் காலத்தில் மிகவும் இரகசியமான முறையில் சில கைதுகள் இடம்பெறுவது தொடர்பில் வடக்கு மக்கள் மத்தியில் பெரும் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பினை மீள உருவாக்க முயன்றனர் என்ற குற்றசாட்டின் கீழ் கிளிநொச்சி ,முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பாக கிளிநொச்சியில் 22 முறைபாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
தேர்தல் காலத்தில் மிகவும் இரகசியமாக இடம்பெறும் இந்தக் கைதுகள் மக்கள் மத்தியில் பெரும் அச்ச நிலையை ஏற்படுத்தியுள்ளது.
கைதானவர்களில் சிலர் கிளிநொச்சியில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவில் தடுக்கவைக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர். சிலர் விசாரணைக்காக கொழும்பு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகள் அமைப்பினை மீள உருவாக்க முயற்சிக்கின்றனர் என்ற குற்றசாட்டில் கடந்த வாரம் மட்டும் ஐவர் கைது செயப்படுள்ளதோடு கடந்த மதம் முழுமையாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் ஒரே குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் இது வரை கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் இது வரை நீதிமன்றிலும் வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.