இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் மென்டிஸ் கைது!
இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் இன்று (05) காலை விபத்து சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறை, ஹெரென்துடுவ பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரின் மோட்டார் வாகனம் மோதியதால் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் இதனால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..