Breaking News

இலங்கை குறித்து ஜெனீவாவில் கவலை வெளியிட்டார் பச்சலெட்

இலங்கையில் காணப்படும் நிலவரம் குறித்து ஐக்கிய நாடு கள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சலெட் அம்மையார் கவலை   
வெளியிட்டுள்ளார். 

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 44ஆவது அமர்வை ஆரம் பித்து வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார். 

இலங்கையில் முஸ்லிம் சமூகத்தினர் இலக்கு வைக்கப்படுவது குறித்து அவர் கவலை வெளியிட்டார். பல உலகநாடுகளில் சிறுபான்மையினத்தவர்களும், குடியேற்றவாசிகளும் அதிகளவு களங்கத்துக்கு ஆளாகின்றமை தொடர்பான தகவல்களால் கவலையடைந்துள்ளேன் என அவர் கூறியுள்ளார். 

இலங்கையிலும் இந்தியாவிலும் முஸ் லிம் சமூகத்தினர் கொரோனாவுடன் தொடர்புபடுத்தும் குரோதப் பேச்சுக்கள், களங்கப்படுத்தல்களால் இலக்கு வைக் கப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்