Breaking News

ரயிலில் பாய்ந்து தமிழ் இளைஞன் தற்கொலை!

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் இளைஞன் ஒருவர் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சம்பவம் தலவாக்கலை மற்றும் கொட்டக்கலை ரயில் நிலையங்களுக்கு இடையிலான சென்கிளையார் பகுதியில் இன்று (19) 11.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

இவ்வாறு உயிரிழந்தவர் தலவாக்கலை சென்கிளையார் தோட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் அருள் பிரசாத் (வயது 24) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.



சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் இளைஞன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என தெரிவித்த தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.