மீண்டும் கொரோனா அச்சம் - கொழும்பு ஜிந்துப்பிட்டி வீதி முடக்கம்!
கொரோனா வைரஸின் அச்சம் மீண்டும் கொழும்பில் எழுந்துள்ள நிலையில் கொழும்பு ஜிந்துப்பிட்டி வீதி முடக்கபட்டுள்ளது.
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நபரொருவர் கொழும்பு 13இல் ஜிந்துப்பிட்டியில் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து கொழும்பு ஜிந்துப்பிட்டி வீதி முடக்கப்பட்டுள்ளது.
கப்பலில் பணிபுரிந்த நிலையில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த மாலுமி ஒருவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்து வருகை தந்த குறித்த நபருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மேலும் 14 நாட்களுக்கு அவர் சுய தனிமைப்படுத்தி உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த காலப்பகுதியில் இவருக்கு மீண்டும் ஒருமுறை பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது இவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது இதனை தொடர்ந்து கொழும்பு ஜிந்துப்பிட்டி வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்பு ஜிந்துப்பிட்டி வீதியை சேர்ந்த 143 பேர் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது