வெலிக்கடை கைதியுடன் தொடர்புடையவர்களுக்கு கொரோனா!
இன்றையதினம் இலங்கையில் 57 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2153 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வெலிக்கடை சிறைச்சாலை கைதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. குறித்த கைதி கடந்த மூன்று மாதக்காலமாக கந்தக்காடு போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வு அளிக்கும் மத்திய நிலையத்தில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டவராவார்.
இதன் அடிப்படையில் குறித்த புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வந்த கைதிகள் மற்றும் அதன் பணியாளர்கள் உட்பட 450 பேரிடம் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர்களில் 56 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று (09) காலை மாரவில பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த பெண் கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் ஆலோசகராக பணியாற்றுபவர் ஆவார்.