கொரோனா விஷயத்தில் மகிழ்ச்சியான செய்தி தடுப்பூசி கண்டுபிடிப்பு - இந்திய விஞ்ஞானிகள்
உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி பற்றிய செய்திகள் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் உலகம் முழுவதும் நம்பிக்கை தரத்தக்க 17 கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்டத்தை எட்டியிருப்பதாக உலகச் சுகாதார நிறுவனம் தனது அறிவிப்பில் வெளியிட்டு இருந்தது. கடந்த ஜுன் 30 ஆம் தேதி இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி பற்றிய செய்தி வெளியானது. அதில் பாரத் பயோடெக் நிறுவனம் மற்றும் பூனேவில் உள்ள தேசிய வைரலாஜி நிறுவனமும் இணைந்து COVIAXIN என்ற புதிய தடுப்பூசியை தயாரித்து இருப்பதாக செய்திகள் வெளியாகியது. இந்த தடுப்பூசி ஏற்கனவே விலங்குகளிடம் சோதனைக்கு உட்படுத்தப் பட்டதாகவும் மனிதர்களின் மீதான சோதனைக்கு ICMR ஒப்புதல் வழங்கியதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் இந்திய விஞ்ஞானிகள் இரண்டாவது கொரோனா தடுப்பூசி பற்றிய மகிழ்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. அகமதாபாத்தைச் சேர்ந்த ஜைடஸ் காடில் ஹெல்த்கேர் லிமிட் எனும் நிறுவனம் கொரோனா தடுப்பூசியை தயாரித்து இருக்கிறது. இந்த நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசி ஏற்கனவே எலி, முயல், கினியா, பிக், மைஸ் போன்ற விலங்குகளிடம் சோதனை செய்து பார்க்கப் பட்டதாகவும் அதில் நம்பிக்கை அளிக்கும் வகையில் நல்ல முடிவுகள் எட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அறிக்கைகளை இந்திய மருந்துக் கட்டுப்பாட்டுக்கு தாக்கல் செய்து தற்போது மனிதர்களின் மீதான சோதனைக்கு ஒப்புதல் பெறப்பட்டு இருக்கிறது.
ஜைடஸ் காடில் ஹெல்த்கேர் லிமிட் நிறுவனத்தின் புதிய கொரோனா தடுப்பூசியை இரு கட்டங்களாக பிரிந்து மனிதர்கள் மீது சோதனை செய்து கொள்ள இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு துறை ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இந்த சோதனை வருகிற 7 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மருந்து கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக மனிதர்களின் உடலில் நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் தன்மைக் கொண்டது எனவும் அந்நிறுவனத்தின் விஞ்ஞானிகள் நம்பிக்கை அளித்து உள்ளனர்.
பாரத் பயோடென் நிறுவனத்தின் COVIAXIN தடுப்பூசியும் தற்போது மனிதர்களின் மீதான சோதனையை ஆரம்பித்து இருக்கின்றன. இந்தச் சோதனையும் வருகிற 7 ஆம் தேதி தொடங்கப்படும் எனத் தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே பல கட்ட சோதனை முடிவுக்குப் பின்னரே இந்த மருந்து ICMR இன் ஒப்புதலுக்கு அனுப்பப் பட்டது எனவும் அதனால் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்த தடுப்பூசியை சந்தையில் எதிர்ப் பார்க்கலாம் எனவும் புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.