Breaking News

அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவருடன் தொடர்பில் இருந்த குண்டசாலை தனிமைப்படுத்தல் முகாமைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். 

அத்துடன் இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2671 ஆக அதிகரித்துள்ளது. 



இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 2001 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

தற்போது, 659 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இதுவரை 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.