ஹர்பஜன் சிங் - லோஸ்லியாவின் பிரெண்ட்ஷிப் பட பாடல் வெளியானது -சிம்பு பாடிய சூப்பர் ஸ்டார் ஆந்தம்..
பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக அறிமுகமாகும் படம் பிரண்ட்ஷிப் ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா ஆகியோர் இயக்கியுள்ள இந்தப் படத்தில், பிக்பாஸ் புகழ் லோஸ்லியா ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ள நிலையில், தற்போது இதன் முதல் சிங்கிள் பாடல் வெளியிடப்பட்டு உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு சமர்ப்பிக்கும் விதமாக இந்தப் பாடலின் லிரிக்ஸ் அமைந்து உள்ளது. இதனை நடிகர் சிம்பு பாடியுள்ளார்.
"அடிச்சு உதைச்சு ஓடவிடும் மாசுக்கு தலைவா
அவர் அழுது உருகிக் கலங்கடிக்கும் கிளாசுக்கு தலைவன்
ஸ்டைலுக்கு அஸ்திவாரம் போட்டது தலைவன்
பஞ்ச் டயலாக்கில் ஓடவிடும் பாசத் தலைவன்
சிரிக்கும் சிங்கிள் சிங்கம்டா.. முறைச்சா நீயும் பங்கம் டா
குழந்தை முகம் பாருடா.. அவர்தான் வேறு யாருடா.."
என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வர்ணிக்கும் வகையில் இந்த பாடலை படக்குழு உருவாக்கியுள்ளது. டி.எம் உதயகுமார் என்பவர் இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார். பாடலுக்கான வரிகளை கௌதம் என்பவர் எழுதியுள்ளார்.
ரஜினியின் தீவிர ரசிகரான நடிகர் ராகவா லாரன்ஸ் தான் இந்த பாடலை ட்விட்டரில் வெளியிட்டு உள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாகி வரும் அந்த பாடல் இதோ......
இந்த படத்தில் காமெடியன் சதிஷ், அர்ஜுன் உள்ளிட்டவர்கள் முக்கிய ரோல்களில் நடித்து உள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக தமிழ்நாட்டில் அதிகம் பிரபலம் ஆன லோஸ்லியாவுக்கு இது தான் முதல் படம். அந்த ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றபோது அவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் கிடைத்தனர். அதற்கு பிறகு அவருக்கு ஹீரோயின் வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு அவருக்கு பெரிய ஹீரோக்களின் படங்கள் எதுவும் கிடைக்கவில்லை. தற்போது அவர் அறிமுகம் ஆகும் பிரண்ட்ஷிப் படத்திற்காக தான் அவரது ரசிகர்கள் தற்போது காத்திருக்கின்றனர்.
ஹர்பாஜன் சிங்கிற்கு இது இரண்டாவது தமிழ் படம். ஏற்கனவே அவர் சந்தானத்தின் டிக்கிலோனா படம் மூலமாக நடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹர்பஜன் சிங், லோஸ்லியா, சதீஷ் உள்ளிட்டவர்கள் கல்லூரி மாணவர்களாக நடித்து உள்ளனர். படத்தின் தலைப்பை வைத்தே கணித்து இருக்கலாம்.. இந்த படத்தின் கதை இந்த கல்லூரி வாழ்க்கையில் நண்பர்கள் இடையே நடக்கும் சம்பவங்கள் பற்றியது தான் என்று.
இந்த படத்தின் கதை கோயம்பத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் நடப்பது போல எழுதப்பட்டு உள்ளது. பஞ்சாபில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து எஞ்சினியரிங் படிக்கும் ஹர்பஜன் சிங் இங்கு உள்ளவர்களுடன் எவ்வாறு நெருக்கம் ஆகிறார் என்பதை மையப்படுத்தி தான் கதை இருக்குமாம்.